இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் அரைஇறுதி போட்டி வருகின்ற வியாழக்கிழமை(மார்ச் 26) சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும்.
முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான ரமீஸ் ராஜா இது குறித்து கூறுகையில், ’பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸிடம் இருந்து இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியாவை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தான் – ஆஸியிடையேயான கால் இறுதி போட்டியில் வஹாப் ரியாஸின் பவுலிங் அபாரமாக இருந்தது. அவர் போட்ட பவுன்சர்களை அடிக்க ஆஸ்திரேலிய அணி மிகவும் திணறியது.
அன்றைய போட்டியில் கிடைத்த இரு கேட்சுகளை தவறவிடாமல் இருந்தால் நிச்சயம் பாக்., அணிதான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு வந்திருக்கும். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுடன் தற்போது ஆஸி., மோதுகிறது. வஹாப்பிடம் இருந்து குறிப்புகள் பெற்றுக் கொண்டால் இந்திய அணிக்கு ஆஸியை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்’ என்று ரமீஸ் கூறியுள்ளார்.
இவர் தற்போது நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் வர்ணனையாளராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இக்குழுவில் இந்திய வீரர்கள் டிராவிட் மற்றும் கங்குலி ஆகியோரும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment