இயக்குநர் பி.வாசுவின் உதவியாளரான க.மூர்த்தி கண்ணன் என்பவர் ராஜ், செரீனா என்ற புதுமுகங்களை வைத்து சாலையோரம் என்ற படத்தை இயக்கிவருகிறார்.
இப்படத்தில் அஞ்சாதே படத்திற்கு பிறகு வில்லனாக நடித்து உள்ளார் பாண்டியராஜன். மேலும் சிங்கம்புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். "நாம் தினமும் சாலையில் நடந்து செல்லும்போது நாம் சென்று சேர வேண்டிய இடம். எதிரே வரும் வாகனங்கள் இவற்றைத்தான் கவனிக்கிறோம்.
ஆனால் சாலையையே உலகமாக கொண்டு ஒரு சமூகமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. சென்னை புறநகரில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற பொருளை சேகரித்து ஒரு சமூகம் வாழ்கிறது. அவர்களின் வாழ்க்கையை காட்டும் படம்தான் இது.
இந்த படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட 10 நாட்கள் குப்பை கிடங்கில் நடத்தியுள்ளார் இயக்குநர். அப்போது இந்த இடத்தில் படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைகள் செய்தார்கள். அதுவும் ஹீரோயின் பணக்கார வீட்டு பெண் என்பதால் அவருக்கு அந்த இடத்தில் வாந்தியே வந்துவிட்டதாம்.
அப்பவும் இயக்குநர் விடாமல் டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்த பின் மீண்டும் குப்பை கிடங்கில் அவரை நடிக்க வைத்திருக்கிறார். இதனால் படக்குழுவினர் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். அதோடு சிங்கம்புலிக்கு இந்த குப்பை கிடங்கில் மேல் நின்று நடனம் ஆடுவது போல் ஒரு காட்சி அமைத்தாராம். அதை அவர் மிகவும் கஷ்டப்பட்டு சிறப்பாக நடித்தார்," என்று இயக்குநரே கூறியுள்ளார்.

No comments:
Post a Comment