Monday, 23 March 2015

கோடிக் கணக்கில் பண மோசடி: ஷில்பா ஷெட்டி மீது வழக்கு!!


நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா இருவரும் சேர்ந்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்து விட்டார் என்ற புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் தம் கணவர் ரிபு சூடன் குந்த்ரா (ராஜ் குந்த்ரா)வுடன் இணைந்து தற்போது மும்பையின் பாந்த்ரா பகுதியில், ‘எஸென்ஷியல் ஸ்போர்ட்ஸ் & பிரைவேட் லிமிடட்’ (Essential Sports and Private Limited) என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மும்பையை சேர்ந்த இந்த நிறுவனம் சார்பில், கொல்கத்தாவைச் சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் 9 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளனர் ஷில்பாவும் அவரது கணவர் குந்த்ராவும்.
மேலும், 2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்த பணம் திருப்பி தரப்படும் என்றும், அவர்களது ‘எஸென்ஷியல் ஸ்போர்ட்ஸ் & பிரைவேட் லிமிடட்’, நிறுவனத்தின் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர் ஷில்பாவும், குந்த்ராவும்.
ஷில்பாவும் குந்த்ராவும், பங்குகளை பரிமாற்றினரே தவிற பணத்தை சொன்ன படி சரியாகக் கட்ட வில்லை. இதனால், எம்.கே. மீடியா நிறுவனம், ஷில்பா மீதும் அவரது கணவர் குந்த்ரா மீதும் மும்பை உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட போலீசார், ஷில்பா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பங்குகளும் பொய்யானவை என்பதைக் கண்டறிந்துள்ளன. மேலும், ஷில்பா மற்றும் அவரது கணவர் குந்த்ரா மீது மும்பை போலீசார், மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment