Wednesday, 18 March 2015

பண்டைய யானை இன விலங்கை மீண்டும் உருவாக்கும் முயற்சி…!


பண்டைய காலத்தில் வாழ்ந்த உரோமங்களை கொண்ட யானை இன விலங்குகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சேர்பியாவில் கண்டெடுக்கப்பட்ட அந்த விலங்கின் கால் எச்சத்திலிருந்து மரபணுக்களை வெற்றிகரமாக நிபுணர்கள் திங்கட்கிழமை பிரித்தெடுத்துள்ளனர்.
ரஷ்யாவிலுள்ள யகுட்ஸக் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் தென்கொரிய விஞ்ஞானிகள் அந்த விலங்கின் இடது முன்காலிலிருந்து எலும்பு மச்சையின் மாதிரிகளை பெற்றுள்ளனர்.
இந்த எலும்பு மச்சையிலான மரபணுக்களைப் பயன்படுத்தி கலப்பிறப்பாக்கம் மூலம் அந்த பண்டைய விலங்குகளை மீண்டும் உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த யானை இன விலங்கானது சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்பியாவிலுள்ள சகா பிராந்தியத்தில் வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த விலங்கு 50 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment