ஹாலிவுட் படமான சிண்ட்ரெல்லா 135 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படத்திருக்கிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (13.03.15) அன்று வெளிவந்தப் படம் சிண்ட்ரெல்லா. இது கற்பனைக் காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தை கென்னத் பிரனாக் என்பவர் இயக்கியுள்ளார்.
லில்லி ஜேம்ஸ், கேட் பிளான்சேட், ரிச்சர்ட் மாட்டேன், ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட், ஹோலிடே கிரைஞர், டெரெக் ஜேகோப், ஹெலினா போன்ஹம் கார்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பேட்ரிக் டோயில் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னர் தோர் போன்ற பல திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 70.1 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 439 கோடிக்கு மேல்) வசூல் செய்து சாதனை படைத்தது.. மேலும் கடந்த 5 வருடங்களில் வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை இப்படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வரை இப்படம் 135 மில்லியன் டாலர் ( இந்தியா மதிப்பில் 800 கோடிக்கு மேல்) வசூலித்ததுள்ளது. குடும்பங்களும் [66%] சிறுவர்களும் [31%] கூட்டம் கூட்டமாக வந்து இப்படத்தை பார்த்து செல்வதால் இன்னும் இப்படத்தின் வசூல் அதிகமாகும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment