இங்கிலாந்து நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. நான்கில், ஒரு பெண் மட்டுமே இங்கிலாந்து நாட்டில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறார் என்றும், நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுப்பது என்ற எண்ணிக்கை உலகளவில் இங்கிலாந்தில்தான் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகமான நாட்கள் தாய்ப்பால் கொடுப்பது அவர்களது புத்திசாலித்தனத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ‘ஐகியூ’ அளவு மிகவும் அதிகமாக உள்ளது என்றும், அவர்கள் அதிகமான அளவு வருமானம் ஈட்டுகின்றனர் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதியஆய்வானது சுமார் 3,500 பிறந்த குழந்தைகளிடம், 30 வருடம் நடத்தப்பட்டதில், ஒருவருடம் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தையானது, நீண்டகாலம் பலன்களை பெறுகிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு குழுவில் இடம்பெற்று இருந்த பிரேசில் நாட்டு பல்கலைக்கழகத்தின் தலைமை ஆசிரியர் டாக்டர் பெர்னார்டோ லெஸ்சா ஹோர்டா பேசுகையில்,
‘நீண்டநாட்கள் தாய்ப்பால் கொடுப்பது, 30 வருடங்கள் வரையில் அவர்களுடைய புத்திசாலித்தனத்தை மட்டும் உயரசெய்யாது, தனிப்பட்ட மற்றும் சமூகத்தின் தரப்பிலும் பிரதிபலிக்கும். எப்படியென்றால் கல்வியில் சிறந்து விளங்குதல், வருமானம் அதிகம் பெறுவதிலும் முன்னேற்றம் காரணமாக.’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
டாக்டர் ஹோர்டாவின் ஆய்வு குழு, 1982-ம் ஆண்டு பிரேசில் மற்றும் பெலோடாஸில் பிறந்த குழந்தைகள் சுமார் 6,000 பேரது தகவல்களை பெற்றது. குழந்தை பருவத்தில் இருந்து அவர்களது தகவல்கள் அனைத்தையும் ஆய்வு குழு பெற்று உள்ளது. ஆய்வில் இடம்பெற்றவர்கள் அனைவரும், 30 வயது வயதில் ‘ஐ.கியூ.’ டெஸ்டிற்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆய்வில் இடம்பெற்றவர்களில் பாதிபேரது கல்வி முன்னேற்றம் மற்றும் வருமானம் குறித்தான தகவல்களும் பெறப்பட்டது. ஆய்வில் அவர்களுடைய புத்திசாலித்தனம் உயர்ந்தது கணப்பட்டது. நீண்ட நாட்கள் தாய்ப்பால் குடித்தவர்கள் கல்விஅறிவு மற்றும் வளர்ந்ததும் பெறும் வருமானம் மற்றும் எல்லா காலங்களிலும் புத்திசாலித்தனம் உள்ளவர்களாக உள்ளனர் என்று தி லான்சட் உலகளாவிய சுகாதாரம் பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிக நாட்கள் என்பது சுமார் 1 வருட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment