Wednesday, 18 March 2015

ஸ்ருதிஹாசனுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா..?


தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகளை பார்த்த அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘யாரும் இதுவரை உறுதியாக எந்த விஷயத்தையும் சொல்லாதபோது, அதை உறுதியாகச் சொல்லிவிட்டதாக மீடியாக்கள் செய்தி பரப்பி வருகின்றன.
ஆனால், நான் தெளிவாகச் சொல்கிறேன் நானும், ஸ்ருதிஹாசனும் நல்ல நண்பர்கள், எங்கேயாவது பார்த்தால் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு செல்வோம். மற்றபடி இதுவரை அவருடன் நான் டேட்டிங்கும் செல்லவில்லை, காதலிக்கவும் இல்லை என்று கூறினார்.
அதேபோல் ஸ்ருதிஹாசன் கூறுகையில், ’எனக்கு சினிமாவில் நடிக்கவே நேரம் போதவில்லை. இதில் நான் காதல் வேறு செய்கிறேனா. ரெய்னா எனது நண்பர் மட்டுமே. அவருடன் என்னை சேர்த்து காதல் செய்தி வெளியானது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
ஆனால் அவர்கள் கூறுவதை யாரும் காதில் வாங்கவில்லை. அவர்கள் காதலர்கள் தான். எந்த காதலர்கள் தான் தங்கள் காதலை ஒப்புக் கொண்டனர் என்று பலரும் பேசி வந்தனர்.
இந்நிலையில் தான் ரெய்னாவுக்கும் அவரது நீண்ட நாள் தோழியான பிரியங்கா சவுத்ரிக்கும் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண அறிவிப்பால் ஸ்ருதி ஹாஸனின் காதலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் ரெய்னா. இதை அறிந்த ஸ்ருதியும் நிம்மதி பெருமூச்சி விட்டிருப்பார்.

No comments:

Post a Comment