முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும், சொத்து குவிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பு வரும், சனிக் கிழமை வெளியாகும் என்றுக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது, முன்னாள் முதல்வரான ஜெ.,விற்கு அபசகுணமானது என்று அ.தி.மு.க., சகுணம் பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனராம்.
தீர்ப்பு நெருங்க நெருங்க, அ.தி.மு.க.,வினரிடையே பதற்றத்துடன், சிறப்புப் பூஜை புனஸ்காரங்களும் அதிகரித்து விட்டன. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் ஏற்பட்டிருக்கும் திடீர் தீ விபத்து அவர்களை இன்னும் பதற்றமடையச் செய்துள்ளதாம்.
ஏற்கனவே அ.தி.மு.க., சகுணம், சாஸ்திரம் பார்க்கும் புள்ளிகள் தலைமைச் செயலகத்திற்கு எதிரில் மதுரையில் அரசவையை எரித்த கண்ணகி கை நீட்டி இருப்பது சரியில்லை என்று எச்சரித்து இருந்தனராம். இதனால், இது கண்ணகியின் வேலை தான் என்றும் சில கருத்துக்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில் உலவுகின்றனவாம்.
அதோடு, இந்த தீ விபத்தால் இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் ஜெ.,வின் தீர்ப்புக்கு எந்த களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பரிகாரங்களும், நடக்க இருக்கிறதாம்.

No comments:
Post a Comment