கமல் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்‘உத்தமவில்லன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது.
அப்போது 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்டதற்கு, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் இதற்கு காரணம் என்று மறைமுகமாக தெரிவித்தார். அவர் பணக் கஷ்டத்தில் இருப்பது போலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்று தெரியவில்லை என அவர் கூறினார்.
அதை தொடர்ந்து உங்களது படங்களுக்கு மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்கிறது.. இதற்கு என்ன காரணம்? என்று கேட்டபோது, எனது ஒவ்வொரு படங்களுக்கும் நான் பிரச்னைகளை சந்தித்து வருகிறேன். சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் எடுத்தேன், படத்தின் தலைப்பிற்கே எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமீபத்தில் அதேபெயரில் ஒரு படம் வந்தது. ஆனால் அதற்கு எதிர்க்கவில்லை, மும்பை எக்ஸ்பிரஸ், தசாவதாரம், விஸ்வரூபம் என தொடர்ந்து என் படங்களுக்கு எதிர்ப்பு வருகிறது. சமீபத்தில், பாபநாசம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து என்னை மட்டும் ஏனோ குறிவைத்து எதிர்க்கிறார்கள்.
இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று கூறினார் கமல்.

No comments:
Post a Comment