Tuesday, 24 March 2015

பழைய காதலியா, புது காதலியா… இளைஞருக்கு வந்த சோதனை…!


தனது முன்னாள் காதலியும் தற்போதைய காதலியும் நீரில் குதித்தபோது அவர்களில் யாரை முதலில் காப்பாற்றுவது என தீர்மானிக்கும் சங்கடத்தை சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எதிர்கொண்டுள்ளார்.
21 வயதான வூ ஷியா எனும் இந்த இளைஞர் 20 வயதான ஜூன் டாங் எனும் பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்தார். ஆனால், பின்னர் அந்த பெண்ணை விட்டுவிட்டு ரொங் சாவோ எனும் 22 வயதான பெண்ணை அந்த இளைஞர் காதலிக்க ஆரம்பித்தார்.
3 மாதங்களின் பின்னர் தனது முன்னாள் காதலனுடனான உறவை புதுப்பித்துக்கொள்ள ஜூன் டாங் முற்பட்டார். தான் நீண்டகாலமாக காதலித்த வந்த வூ ஷியாவிடமிருந்து விலகிவிடுமாறு வூ ஷியாவின் புதிய காதலியான ரொங் சாவோவிடம் அந்த பெண் வலியுறுத்தினாள். இந்த விசயத்துக்கு தீர்வொன்றைக் காண்பதற்காக மூவரும் சந்தித்து பேசுவதற்கு வூ ஷியா ஏற்பாடு செய்தபோதே மேற்படி இரு பெண்களும் பாலமொன்றி லிருந்து பாய்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செங்ஜியாங் மாகாணத்தின் நின்க்போ நகரைச் சேர்ந்த வூ ஷியாவோ இது தொடர்பாக கூறுகையில், "இரு பெண்களிடமிருந்தும் நான் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டேன். இருவரில் யார் எனக்கு வேண்டும் என்பது தொடர்பில் எனக்கு குழப்பம் ஏற்பட்டது. எனவே மூவரும் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், இச்சந்திப்பின்போது நிலைமை மேலும் மோசமடைந்தது. அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
பின்னர் ஜூன் பாலத்திலிருந்து குதித்தார். பின்னர் அவர் உதவி கோரினார். ஆனால், "நானா அவளா" எனக் கூறிக்கொண்டு ரொங்கும் குதித்தார். அதன்பின் நானும் நீரில் குதித்து தற்போதைய காதலியான ரொங்கை காப்பாற்றினேன்.
எனது சகோதரரை தொலைபேசியில் அழைத்து ஜூன் டாங்கை காப்பாற்றுமாறு கோரினேன். சகோதரர், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் மூலம் ஜூன் டாங் காப்பாற்றப்பட்டார்" என்றார்.

No comments:

Post a Comment