ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, கடந்த வருடம் தான் தனது நீண்டநாள் காதலரான பிராட் பிட்டை 6 குழந்தைகளுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்யாமலேயே பல வருடங்களாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு பிறந்தது 3 குழந்தைகள், அவர்கள் தத்தெடுத்தது 3 குழந்தைகள். ஏஞ்சலினா ஜோலி குடும்ப வாழ்க்கை, சமூக சேவை, நடிப்பு என பரபரப்பாக இருந்தாலும் சிறந்த இயக்குநராகவும் தன்னை நிரூபித்தவர்.
சமீபத்தில் ஏஞ்சலினாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருந்ததால் அவரின் கருப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. ஏஞ்சலினா ஜோலியின் தாய் மார்ஷலின் பெட்ர்னாட் மார்பக புற்றுநோயால் பலியானார். இதனால் ஏஞ்சலினா ஜோலிக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
அவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 87 சதவீத வாய்ப்பும், கர்பப்பை புற்றுநோய் ஏற்பட 50 சதவீத வாய்ப்பும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2013ம் ஆண்டு புற்றுநோய் அபாயம் இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் தனது 2 மார்பகங்களையும் அகற்றினார் ஏஞ்சலினா.
தற்போது கர்பப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் இருந்ததால் அறுவை சிகிச்சை மூலம் ஜோலியின் கர்பப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இனி என்னால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது. என் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் என நினைக்கிறேன். இது வாழ்வில் ஒரு பகுதி. இதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார் ஏஞ்சலினா ஜோலி.

No comments:
Post a Comment