Tuesday, 24 March 2015

பழி தீர்த்த எலியாட்!!! நொறுங்கிபோன குஷ்பு!!?


2015ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் நியூசி அணியின் வெற்றிக்கு காரணமான எலியாட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டர். இவர் 84 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆனால், இவர் உண்மையிலேயே நியூசிலாந்தை சேர்ந்தவர் கிடையாது. இவரின் தாய் மண் தென் ஆப்ரிக்கா தான். தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் பிறந்த இவர் உள்ளூர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார். ஆனால், தென் ஆப்ரிக்க அணித் தேர்வில் இனரீதி இட ஒதுக்கீடு காரணமாக இவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இவரின் கிரிக்கெட் திறமையை பார்த்து வியந்த நியூசியின் முன்னாள் வீரர் கென் ருதர்போர்டு, நியூசிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன் பின்பு தான், எலியாட்டின் நியூசி பயணம் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு எல்லாம். தற்போது தனக்காக பழி தீர்த்தும் கொண்டார். நியூசி அணி முதன் முதலாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெல்ல இவர் காரணமாக இருந்துள்ளார்.
இந்த ஆட்டம் முடிந்ததும் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் நியூசி அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தென் ஆப்ரிக்க அணி தோல்வி அடைந்தது கண்டு இதயமே நொறுங்கி போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் செய்த டுவிட் இதோ…

No comments:

Post a Comment