பிரமாண்ட இயக்குநரின் ஓரெழுத்து படத்தில் மிரட்டலாக நடித்திருந்தார் ’சாமி’ நடிகர். இவர் நடிப்பை பார்த்து பாராட்டாத ரசிகர்களும், திரையுலகினரும் இல்லை.
இந்த படத்தில் ஓவ்வொரு கேரக்டருக்கும் தகுந்தாற்போல் உடம்பை கூட்டியும், குறைத்தும் நடித்ததை பார்த்து எல்லோரும் வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தேசிய விருதுகூட கன்ஃபார்ம் என்று சில ஆருடம் சொல்கிறார்கள்.
ஆனால் அந்த நடிகரோ ஏண்டா இந்தப் படத்தில் நடித்தோம் என்று வறுத்தப்படுகிறாராம். காரணம் அப்போது வலுக்கட்டாயமாக உடலை கூட்டி குறைத்தன் வேதனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம்.
கடுமையான உடற்பயிற்சி, வலுக்கட்டாயமாக மேற்கொண்ட டயட், உட்கொண்ட சில மெடிசின்கள் காரணமாக இப்போது சில பிரச்னைகளால் அவதிப்படுவதோடு, தன் பழைய தோற்ற பொலிவை கொண்டுவர மிகவும் சிரமப்படுகிறாராம். இதனால் வெளிநாட்டுக்கு சென்று இதற்கான சிகிச்சை பெற்று வர தீர்மானித்திருக்கிறாராம் அந்த நடிகர்.

No comments:
Post a Comment