Wednesday, 4 March 2015

தினமும் 5 கப் காஃபி குடிப்பவர்களுக்கு Heart Attack வராதாம்!!!


தினமும் 3 அல்லது 5 கப் காஃபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவு என்று சமீபத்திய ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 41 வயதுடைய சுமார் 25,000 ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகமாக காஃபி பருகுபவர்கள் மற்றவர்களை விட குறைந்தளவே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
இவர்களில் காஃபி குடிக்காதவர்கள், ஒரு கப் காஃபி, ஒன்று முதல் மூன்று கப் காஃபி மற்றும் மூன்று முதல் ஐந்து கப் காஃபி பருகுபவர்கள் என பல வகையில் பிரிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தியுள்ளனர்.
காஃபியில் இருக்கும் வேதிப் பொருட்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்பது அவர்கள் கருத்து. இது காஃபி பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவலாக அமையும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment