Wednesday, 4 March 2015

அரசியல் வாதிகளை தோலுரிக்கும் கமல்ஹாசன்..?


கமல்ஹாசன் நடிப்பில்‘உத்தமவில்லன்’,‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம்-2′ என வரிசையாக மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் அதற்குள் கமலின் புதிய படம் குறித்த செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
பீகே ரீமேக்கில் நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், கமல் வேறு இரு படங்களில் நடிப்பது மற்றும் இயக்குவது குறித்தும் பேசி வருகிறாராம். அதில் ஒரு படத்தை பிரபு தேவா இயக்கப் போவதாக கடந்த வாரம் செய்தி வெளியாகியது.
ஆனால் இது குறித்து இருதரப்பிடமும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களுடன் இணைந்து கமல் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளாராம். இப்படத்தை தன் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பாக தயாரிக்க போகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள இப்படத்தை ஐந்தே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் அண்டர்கிரவுண்ட் அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக செய்யும் சில விஷயங்களை தோலுரித்து காட்டப்போகிறாராம். வழக்கம்போல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து இந்த படத்தை உருவாக்க நினைத்துள்ளாராம் கமல்.

No comments:

Post a Comment