125 மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்ந்து வரும் அரிய வகை கோப்ளின் சுறாமீனின் புகைப்படத்தினை ஆஸ்திரேலியாவின் சிட்னி மியூசியம் வெளியிட்டுள்ளது.
மிக ஆழத்தில் மட்டுமே காணப்படும் இந்த அரிய வகை சுறா பற்றி இதுவரை அதிகமானோர் கேள்விபட்டிருக்க கூட மாட்டோம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு மீனவர் 656 அடி ஆழத்தில் இந்த மீனை பிடித்த ஒரு மீனவர், இதன் விசித்திர அமைப்பை பார்த்து அதனை ஆஸ்திரேலிய மீன் பண்ணையில் ஒப்படைத்தார்.
சிட்னி மியூசியத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த கோப்ளின் சுறாவானது, பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமான தோற்றத்தினை கொண்டிருக்கும்.
இதன் பற்கள் கூர்மையான கத்தி போன்று அமைந்திருக்கும். இதுவும் ஒரு வேட்டை உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment