Tuesday, 3 March 2015

யாருக்காகவும் உன்னை மாற்றாதே.. சிவகார்த்திகேயனுக்கு அஜித் அட்வைஸ்..!


சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’காக்கி சட்டை’ படம் கலந்த விமர்சங்களை பெற்று வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் டான்ஸ், ஃபைட், காமெடி என அனைத்திலும் தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவரின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்ற கருத்தே பரவலாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் காக்கிசட்டை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகாக ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது காக்கி சட்டை படம் பற்றியும், நடிகர் அஜித் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
அஜித் குறித்து அவர் கூறுகையில் ‘மான்கராத்தே படம் ரிலிஸான சில நாட்கள் கழித்து அஜித் சாரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். சுமார் 5 மணி நேரம் அவரிடம் பேசினேன். என்னை வெகுவாக பாராட்டிய அவர், சிவா நீங்க சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கீங்க, அப்படியே போங்க.. யாருக்காகவும் உங்களை மாற்றி கொள்ளாதீங்க என்று அட்வைஸ் செய்தார்’ என அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment