இலங்கையின் சுதந்திரக் கட்சியினரின் ஜனாதிபதிகளை கூட்டும் முயற்சி வேடிக்கையாக இருப்பதாகச் சுட்டிக் காட்டி இலங்கை நாடாளுமன்றத்தையே சிரிக்க வைத்துள்ளார், இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்க.
இலங்கையின் சுதந்திரக் கட்சியினர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா குமரதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூவரையும் ஒரே மேடையில் கூட்டி ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்த விடயம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில், நேற்று பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்று தலைவர்களையும் இணைக்கும் முயற்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக நகைச்சுவையாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இந்த மூன்று தலைவர்களையும் இணைக்கும் வைக்கும் முயற்சிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நகைச்சுவையாக கூறினார்.
இதைக் கேட்ட அவையினர் வாய்விட்டுச் சிரித்து விட்டனராம். இலங்கையின் சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி பதிவியேற்றுள்ள அதே வேளை, ஆலோசனையாளர்களாக சந்திரிகாவும் மஹிந்தவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment