Wednesday, 4 March 2015

ஆம் ஆத்மி கட்சிக்குள் குழப்பம்!! கெஜ்ரிவால் மீண்டும் ராஜினாமா….!!


டெல்லியில், வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மிக் கட்சி. இந்தக் கட்சியின் தலைமை தேசிய ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்றிருந்த அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தேர்தல் வேட்பாளர் பட்டியல் அறிவித்ததில் இருந்தே ஆம் ஆத்மிக்குள், குழப்பம் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர், கேஜ்ரிவாலை மையமாக வைத்தே கட்சியும் இயங்குவதாக குற்றம்சாட்டி வந்தனர்.
இது தொடர்பாக செயற்குழு உறுப்பினர்களுக்கு பிரசாந்த் பூஷண் கடிதமும் அனுப்பியிருந்தார். அதோடு, கடந்த பிப்ரவரி 26ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள் சிலர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது அதிருப்தி தெரிவித்தனர். இதை அடுத்து, அந்த கூட்டத்திலேயே கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியிடம் கொடுத்தார்.
ஆனால் இந்த கடிதத்தை கட்சியினர் ஏற்றுக் கொள்ள வில்லை. இதைத் தொடர்ந்து இன்று ஆம் ஆத்மியின் தேசியச் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், கெஜ்ரிவால் கட்சியிலிருந்து விலகுவாரா என்று முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், கெஜ்ரிவால் உடல் நலக் குறைவால், கூட்டத்திற்கு வரவில்லை.
ஆனால், தன் ராஜினாமா கடிதத்தை இரண்டாவது முறை கொடுத்துள்ளார்.இந்த கடிதத்தில் தம்மாக் டெல்லி முதல்வராகவும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளராகவும் ஒரே சமயத்தில் பணியாற்ற முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த முறை கட்சி இவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டால் ஆம் ஆத்மி இரண்டாகும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் புள்ளிகள் கருதுகின்றன.

No comments:

Post a Comment