ஐசிசி-யின் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் தோனி மற்றும் துணைக் கேப்டன் விராட் தங்கள் இடங்களில் இருந்து கீழிறங்கியுள்ளனர்.
சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் தோனி 8 வது இடத்தில் இருந்து 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், துணைக் கேப்டன் கோலி 3வது இடத்தில் இருந்து 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் தொடர்ந்து 7வது இடத்தினை தக்க வைத்திருக்கின்றார்.
பவுலர்களில் ஷமி 25வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகள் முடியும் போது இதில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment