வடகறி நடிகருடன் இணைந்து பலமானவனை குறிக்கும் தலைப்பை கொண்ட படமொன்றில் நடித்து வருகிறார் இசையமைப்பாளருடன் முத்த சர்ச்சையில் சிக்கிய நடிகை.
இந்தப் படத்தில் நடிக்கும் போது வடகறி நடிகருடன் முத்த நடிகை ஓவர் நெருக்கம் காட்டுகிறார் என்றும், இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கப் பட்டது. அதற்குத் தகுந்தாற்போல் நடிகரும் நாயகியைப் புகழ்ந்து ஆஹா, ஓஹோ வென பேட்டியெல்லாம் கூட கொடுத்தார். ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லையாம்.
இனி தப்பித் தவறிக் கூட இந்த நடிகையுடன் ஜோடியாக நடித்து விடக் கூடாது என மனதிற்குள் சபதம் எடுத்திருக்கிறாராம் வடகறி நடிகர். காரணம், படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஓவராக பந்தா செய்கிறாராம்.
நாயகன் சில நிமிடங்கள் ஸ்பாட்டில் காக்க வைத்தால் கூட, கோபத்துடன் கேரவனுக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறாராம். இதனால், நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டு விடுகிறதாம். எனவே, தான் இனி இந்த நடிகையுடன் நடிக்கக் கூடாது என அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம் நடிகர்.

No comments:
Post a Comment