Monday, 2 March 2015

அரைகுறை ஆடையில் நடிச்சா என்ன தப்பு..? சீறும் நடிகை..!


எஸ்.ஜே.சூர்யாவின் இசை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருப்பவர் சாவித்ரி. இசை படத்திலேயே இவர் ஏகத்துக்கும் கவர்ச்சியாக நடித்திருப்பார். அது பத்தாதென்று இப்போது அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்தால் என்ன தப்பு என்று கேட்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ், இந்தி, மராத்தி என 3 மொழியில் தலா ஒவ்வொரு படம் நடித்திருக்கிறேன். நடிப்பதற்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது கவர்ச்சியும் முக்கியம் என நான் எண்ணுகிறேன். இசை படத்தில் கதைப்படி கிளாமர் தேவைப்பட்டது. அதனால் கவர்ச்சி காட்டி நடித்தேன். அதில் தவறு இருப்பதாக எண்ணவில்லை.
படத்தின் முதல்பாதியில் கிளாமராக நடித்தாலும் இரண்டாம் பாதியில் நடிப்பின் மூலம் அதை நிவர்த்தி செய்திருக்கிறேன். நான் செய்தது சரிதானே? தற்போது நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்தால் முன்னுரிமை கொடுப்பேன். தமிழ் ரசிகர்களுக்கு சாவித்ரி பெயர் பிடித்திருப்பதால் அந்த பெயரிலேயே தொடர்ந்து நடிப்பேன். இவ்வாறு சாவித்ரி கூறினார்.

No comments:

Post a Comment