Tuesday, 24 March 2015

வேற தொழிலில் இறங்கிய தமன்னா..?


நீண்ட காலமாக மார்க்கெட் இழந்து வந்த தமன்னா தற்போது ஆர்யாவுடன் இணைந்து ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்றபடத்தில் நடித்து வருகிறார். இதுதவிர, இரண்டு தெலுங்கு படங்களும் அவர் கைவசம் உள்ளது.
இந்நிலையில் அவர் நடிப்பை தவிர பிற தொழில்களிலும் ஈடுபட்டுவருகிறார். அண்மைகாலமாக நடிகர், நடிகைகள் நடிப்பை தவிர பிற தொழில்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பல நடிகைகள் சொந்தமாக ஆடை அலங்காரம், புடவை கடை, பேஷன் ஷோ ரூம்கள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நடிகை தமன்னாவும் இறங்கியுள்ளார்.
‘ஒயிட் அண்ட் கோல்ட்' என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்து விற்கும் தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளாராம். இந்த டிசைனிங்கில் இந்தியாவின் சில முன்னணி டிசைனர்கள் ஈடுபட்டிருந்தாலும், தமன்னா தனது சொந்த வடிவமைப்பையும் இதில் ஈடுபடுத்தப் போகிறாராம்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமன்னா, என்னுடைய ஸ்டைலை இதில் புகுத்தியுள்ளேன். எனது ரசிகர்களுக்காக இதனை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment