Tuesday, 24 March 2015

இந்தியாவிற்கு வரும் DUCATI நிறுவனம்!!


இத்தாலி மோட்டார் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி கார்கள் மற்றும் பைக்குகளுக்கு எப்பவுமே மவுசுதான். இந்நிலையில் டுகாட்டி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இந்தியாவிலும் கால் பதிக்கின்றது இந்நிறுவனம்.
டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய 3 நகரங்களில் இப்போது அதிகாரப்பூர்வ டுகாட்டி டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டுள்ளன. டியாவெல், ஹைபர்மோட்டார்ட், பனிகாலெ, மான்ஸ்டர் ஆகிய டூகாட்டி பைக்குகள் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு உள்ளன.
சமீபத்தில் அறிமுகமான ஸ்க்ராம்ப்ளர் பைக்கும் விரைவில் இங்கு விற்பனைக்கு வர உள்ளது. மேலும்,பெங்களூரூவிலும் டீலர்ஷிப் திறப்பதற்கு மும்முரமாக இருக்கிறது டுகாட்டி இந்தியா. ஸ்க்ராம்ப்ளர் பைக் சுமார் 6 லட்சம் ரூபாயில் இருந்து 7.5 லட்சம் ரூபாய் வரை விலை கொண்டிருக்கும்.
டுகாட்டி மான்ஸ்டர் பைக்குகள் சுமார் 7 லட்சம் ரூபாயில் இருந்து 26 லட்சம் ரூபாய் வரை விலை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஹைப்பர்மோட்டார்ட் பைக்குகளின் விலை 10 லட்சத்தில் இருந்து 11.1 லட்சம் வரை இருக்கும். டியாவெல் சுமார் 13.5 லட்சம் ரூபாயில் இருந்து 37 லட்சம் ரூபாய் வரையும், மல்ட்டிஸ்ட்ராடா பைக்குகளின் விலை 14 லட்சத்தில் இருந்து 20 லட்சம் வரையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment