Wednesday, 4 March 2015

நான் இவர் கூடலாம் நடிக்க மாட்டேன்.. பயமா இருக்கு..?


சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்கியுள்ள படம் ’இவனுக்கு தண்ணில கண்டம்’. சின்னத்திரை தொகுப்பாளர் தீபக் ஹீரோவாக அறிமுகமாகிறார். நேகா ஹீரோயினாக நடிக்கிறார்.
தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக வரவேண்டும் என்ற ஆசையில் ஊரிலிருந்து சென்னைக்கு ஓடி வரும் தீபக், ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து அவர் எப்படி விடுபடுகிறார் என்பதை நகைச்சுவையாக இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்களாம். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டனர் படக்குழுவினர்.
இந்த டீஸருக்கு இவ்வளவும் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வெளியிடப்பட்ட ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் லைக்குகளை அள்ளியது. எல்லாத்துக்கும் ஹோஸ்ட் கோபால் வர்மாவின் மகிமைதான் காரணம். அட ஆமாங்க எல்லாம் நம்ப நான் கடவுள் ராஜேந்திரனின் மகிமை.
நேற்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அழகாக தமிழில் பேச ஆரம்பித்த நாயகி நேகா ராஜேந்திரனைப் பற்றி பாராட்டித் தள்ளி விட்டார். “இதுதான் நான் நடிக்கிற முதல் படம். எனக்கு சினிமாவைப் பத்தி எதுவுமே தெரியாது. இந்தப் படத்துல ராஜேந்திரன் சார் கூட நடிக்கச் சொன்ன போது ரொம்ப பயமா இருந்தது.
இயக்குநர் கிட்டயும் சார் அவர் கூடலாம் நான் நடிக்க மாட்டேன், எனக்கு பயமா இருக்கு என்றேன். அதற்கு இயக்குநர், பயப்படாதீங்க, அவர் கிட்ட நீங்க முதல்ல பேசிப் பாருங்க என்றார். அப்புறம் அவர்கிட்ட பேச்சு கொடுத்தேன். பேச ஆரம்பித்ததும்தான் தெரிஞ்சது, அவர் ஒரு குழந்தை மனசுக்காரர்னு. ஆள் பார்க்கத்தான் முரட்டுத்தனமா இருக்காரு, ஆனால், அவர் ஒரு குழந்தை மாதிரி,” என்றார்.

No comments:

Post a Comment