மார்ச் 5
1770
அமெரிக்க புரட்சிக்கு வித்திட்ட பாஸ்டன் படுகொலை நிகழ்ந்த தினம்…!!
இன்று சகோதர்த்துவம் போற்றி வரும் அமெரிக்காவுக்கும் இங்கிலாத்திற்கும் இடையில் நடந்த ஒரு புரட்சிக்கு அடிக்கல்லாக அமைந்த பாஸ்டன் படுகொலை நடந்த தினம் இன்று.
இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் அமெரிக்கர்கள் இருந்த காலம். 1767 முதலே, அமெரிக்கர்கள் மீது, அவர்களது நாட்டிலேயே தேவையில்லாத வரியை விதித்து வந்தது பிட்டிஷ் அரசாங்கம்.
அதிலும், அமெரிக்காவின் பாஸ்டன் நகரம் இந்த விருப்பமில்லாத வரிகளால் தினிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பாஸ்டன் மக்கள் போராட்டம் செய்ய ஆரம்பித்தனர்.
இந்த போராட்டக்காரர்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம், பெரும் படையை பாஸ்டனுக்கு அனுப்பியது. இந்த படையைக் கண்டதும் அமெரிக்க மக்களுக்கு ஆத்திரம் அதிகமானது.
ஒடுக்க வந்த பிரிட்டிஷ் படையினர் மீது, தரையில் படர்ந்திருந்த பனிக்கட்டியை எடுத்து உருட்டி அடித்தனர். இந்த சிறிய வன்முறை அப்படியே வளர, கற்கள் குச்சிகளைக் கொண்டு படையினரை தாக்கினர் மக்கள்.
ஒரு கட்டத்தில் படையினர் பொருமை இழந்து மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதனால், அங்கு கூடி இருந்த அமெரிக்கர்களில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏனையவர்கள் தெரித்து ஓடினர்.
இந்த சம்பவத்தால் உலகெங்கும் வாழ்ந்து வந்த அமெரிக்கர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக பொராட்டத்தில் ஈடுபட்டனர். இது உலகெங்கும் அமெரிக்க புரட்சியாக வெடித்தது.
1943
ஐரோப்பாவில் முதல் போர் விமானம் பறந்தது!!
இங்கிலாந்தின் முதல் போர் விமானங்களான கிலோஸ்டர் மிடியோர் முதன் முறியாக பறந்த தினம் இன்று. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலியை எதிர்த்து போர் செய்த முதல் போர் விமானம் இந்த கிலோஸ்டர் மிடியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் பறந்த முதல் விமானமும் இது தான். 1936ம் ஆண்டே இந்த விமானத்திற்கான எஞ்சின்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், 1940லிருந்து தான் இவற்றை தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1943ம் ஆண்டு பிரிட்டன் வானில் வலம் வந்த இந்த விமானங்கள் 1944ம் ஆண்டு ஜூலை 27 போரில் ஈடுபட்டது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1824 - பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்தது.
1940 - சோவியத் உயர்பீடம் 40,100 போலந்துப் பிரஜைகளுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.
2008 - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.
இன்றைய சிறப்பு தினம்
தேசிய மரநடுகை தினம் (ஈரான்)
செயின்ட் பிரான் தினம் (கார்ன்வால்)
.jpg)
No comments:
Post a Comment