’ஐ’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் '10 எண்றதுக்குள்ளே’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.
கோலி சோடா படத்தை இயக்கிய விஜய்மில்டன் இயக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். முதன் முறையாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தை அடுத்து விக்ரம் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தை கெளதம் மேனனும், இன்னொரு படத்தை ஆனந்த் சங்கரும் இயக்குகிறார்கள். இவற்றில் கௌதம் மேனன் இயக்கும் படம் ஜுன் மாதம்தான் தொடங்குகிறது.
ஆனால் அதற்கு முன் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்றும் இந்தப்படத்துக்கு ’மர்ம மனிதன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது விக்ரமை வைத்து ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்த அனிருத் அடுத்ததாக 'வீரம்’ சிவா இயக்கவிருக்கும் புதிய படத்தின் மூலம் ‘தல’ அஜித்துடனும் கூட்டணி அமைத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து தற்போது விகர்முடனும் கூட்டணி அமைக்கப்போகிறார். ஏற்கெனவே ஷங்கரின் ‘ஐ’ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்...’ பாடலை அனிருத் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment