திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணிபுரிந்தார்.
பதவி உயர்வு பெற பல ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்ட இவர் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் பதவி உயர்வு பெறாமலே உயிரிழந்ததால் அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய பயன்கள் முழுவதும் கிடைக்காது.
இந்நிலையில் சென்ற வாரம் போக்குவரத்து துறை ஆணையிரிடம் இருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது. அதில், ’கண்ணம்மாளை தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து அந்த மாவட்ட வட்டார அலுவலக போக்குவரத்துதுறை அதிகாரி கூறியதாவது, ,தமிழகம் முழுவதும் கண்ணம்மாளையும் சேர்த்து 26 பேருக்கு கடந்த 18–ந்தேதி பதவி உயர்வு அளித்ததற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு பட்டியலில் கண்ணம்மாள் நீண்ட நாட்களாக இடம் பெற்றிருந்தார். ஆனால் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வழங்கிய பதவி உயர்வு காரணமாக அதன் பயனை கண்ணம்மாள் அடைய முடியவில்லை.
கண்ணம்மாள் இறந்த உடன் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், அவருக்கான பதவி உயர்வு கோப்பை திரும்ப பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இது போன்ற அவலம் ஏற்பட்டிருக்காது’ என்றார்.

No comments:
Post a Comment