எக்காரணத்துக் கொண்டும் பத்திரிகையாளர்கள் தன்பக்கம் வரவே கூடாது என்கிற கொள்கையில் மிக மிக உறுதியாக இருப்பவர் ’நயன’ மான நடிகை. அடுத்து அந்த இடத்தில் இருப்பவர் இவரின் நெருங்கிய தோழியான நம்பர் நடிகை தான்.
பத்திரிகையாளர்களை கேரவேன் அருகில்கூட இந்த நடிகை அண்ட விடுவதில்லையாம். சமீபத்தில் அவரது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலேயே ஒரு புகைப்படக்காரர் தூக்கி வெளியே வீசப்பட்டதையும், அவரது கேமரா பறிமுதல் செய்யப்பட்டு பல மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகே வழங்கப்பட்டது என்பதையும் பத்திரிக்கையாளர்கள் யாரும் மறக்கவில்லை.
இது ஒரு புறமிருக்க, ஜெயம் நடிகருக்கு ஜோடியாக அவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு நிருபர்களை அழைக்கலாமா? என்று கேட்கப்பட்டதற்கு, அருகிலிருந்த அந்த நடிகை, “எப்போன்னு சொல்லுங்க. அன்னைக்கு நான் படப்பிடிப்புக்கு வர மாட்டேன்,” என்று சொல்லி படக்குழுவினர் பேரதிர்ச்சி கொடுத்தாராம்.
“நிருபர்களை வரச் சொல்வதே நாயகியின் பேட்டிக்காகத்தான். நீங்க வரலேன்னா எப்படி?” என்று இயக்குநர் கேட்க, “ம்ஹூம். தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்பாங்க. ப்ளீஸ்... என்னை விட்ருங்க,” என்று கூறிவிட்டாராம். அதனால் அந்த செய்தியாளர் சந்திப்பே ரத்தாகிவிட்டதாம்.
இது ஒரு புறமிருக்க தற்போது இளம் இசையமைப்பாளருடன் முத்த சர்ச்சையில் சிக்கிய நடிகையும் ஊடகத்தினரைக் கண்டால் தப்பித்துவிடுவது நல்லது என்று தனக்குத்தானே கூறி ஓட்டமெடுக்க ஆரம்பித்திருக்கிறாராம் . பேட்டி என்று யார் தொடர்புகொண்டாலும், “எனக்கு தூங்கவே நேரமில்லை,” என்று கராறாகச் சொல்கிறாராம்.

No comments:
Post a Comment