விக்ரம் பிரபு நடித்த ’இவன் வேற மாதிரி’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சுரபி. இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர், தமிழில் ஜெய்க்கு ஜோடியாக ‘புகழ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தவிர இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கி வரும் ‘அட்டாக்’என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படத்தில் நடிகை சுரபி இதுவரை எந்த நடிகையும் நடித்திராத பைக் மெக்கானிக் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் தமிழில் இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்த சுரபி இந்த படத்தின் மூலம் கவர்ச்சிக்கு மாறியுள்ளாராம். இந்தப்படத்தில் நடித்தது குறித்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் சுரபி.
அவர் கூறியதாவது, இயக்குநர் ராம் கோபால் வர்மா ஹீரோயின்களை திரையில் ஆபாசமாக காட்டுகிறார் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே அவர் ஹீரோயின்களை உணர்வு பூர்வமானவர்களாகவும், அழகாகவும்தான் காட்டுகிறார். அவர் இயக்கும் ‘அட்டாக்‘ தெலுங்கு படத்தில் நான் மெக்கானிக்காக நடிக்கிறேன்.
அவர் பெண்களை நேசிப்பதுடன் ஓவியம்போன்று பார்க்கிறார். அவருடன் 3 நாட்கள் போட்டோ ஷூட்டிங்கில் பங்கேற்றேன். அதுபற்றி பெரிதாக பேசினார்கள். இப்படத்தில் ஆக்ஷன் காட்சியும், பாடல் காட்சியில் கிளாமரும் இருக்கும். ரங்கீலா படம் மூலம் ஊர்மிளாவை ஒரே நாளில் ஸ்டார் ஆக்கி காட்டினார் வர்மா. ஒ
ரு ஹீரோயினுக்கு எது பொருந்தும் என்பதும், அவர்களை திரையில் எப்படி காட்ட வேண்டும் என்பதும் வர்மாவுக்கு தெரியும். நான் தொடர்ச்சியாக குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்பவில்லை. மற்ற வேடங்களில் எனக்கு நடிக்க தெரியாது என்று ரசிகர்கள் எண்ணிவிடக்கூடாது. எனது பாணியை மாற்றும் நேரம் தற்போது வந்திருக்கிறது என்று சுரபி கூறினார்.

No comments:
Post a Comment