இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பானின் முசாஷி போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு சொந்தமான ஆராய்ச்சிக் குழு இதனை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், பால் ஆலன்.
உலகிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலாக கருதப்படும் முசாஷி 1938ஆம் வருடம் ஜப்பான் கடற்படைக்காக கட்டப்பட்டது. இதன் எடை 73ஆயிரம் டன்கள் ஆகும். 2ஆம் உலகப் போரின் போது வெய்ட் வளைகுடா பகுதியில் 1944ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்டது.
இது முழ்கடிக்கப்பட்டு சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்படது. இதனை தேடும் பணியை 8 ஆண்டுகளுக்கு முன்பே தனது குழு ஆரம்பித்து விட்டதாக ஆலன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment