கேரளா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரீமா கல்லிங்கல். இவர் தமிழில் நடிகர் பரத்துடன் ’யுவன் யுவதி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
பொதுவாகவே தன் மனதிற்கு சரியென்று படும் துணிச்சலான கருத்துக்களை அவ்வப்போது சூடான ஸ்டேட்மேன்ட்டுகளாக வெளியிடுட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார். அதேபோன்று தூக்கு தண்டனை கைதியான முகேஷ் சிங்கின் ஆணவ பேச்சை கண்டு தற்போது கொந்தளித்துள்ளார்.
டில்லி மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முகேஷ் சிங் என்பவன் சமீபத்தில் “ பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பொறுப்பு. அந்த பெண்ணின் ஆண் நண்பர் மட்டும் எங்களை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் நாங்கள் அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்க மாட்டோம். அன்று பேருந்தில் நடந்தது ஒரு விபத்து.
பலாத்காரம் செய்யும்போது அந்த பெண் எங்களை எதிர்த்து போராடியிருக்கக் கூடாது. அமைதியாக இருந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அனைத்தும் முடிந்த பிறகு அவரின் நண்பரை மட்டும் அடித்திருந்திருப்போம்.
நல்ல பெண் இரவு 9 மணிக்கு ஊர் சுற்ற மாட்டார். ஆணும், பெண்ணும் சரி சமம் அல்ல. வீட்டு வேலையை செய்வது தான் பெண்களின் வேலை. தூக்கு தண்டனை வழங்கினால், எதிர்காலத்தில் இதைவிட மோசமான பலாத்காரம் நடக்கும்" என்று பேட்டி அளித்துள்ளான். அவனின் இந்த ஆணவ பேச்சு பலரையும் போல ரீமா கல்லிங்கல்லையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இது குறித்து தனது உணர்வை வெளிப்படுத்தும் விதமாக “மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்.. பிற்பாடு அவன் இந்திய தெருக்களில் சுதந்திரமாக கூட உலாவரக்கூடும்.. பெஸ்ட் ஆப் லக் லேடீஸ்” என நமது நாட்டு சட்ட அமைப்பை பற்றி விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்..

No comments:
Post a Comment