Thursday, 5 March 2015

அமெரிக்க தூதருக்கு கொரியாவில் நடந்த கொடூரம்!! முகத்தில் மட்டும் 80 தையல்கள்!!


ஐக்கிய தென் கொரிய அமெரிக்க தூதர், ஓட்டல் ஒன்றில் வைத்து, கொரிய பிரஜை ஒருவரால் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
மார்க் டபுள்யூ. லிப்பெர்ட் (Mark W. Lippert) அமெரிக்காவின், தென் கொரிய தூதர். அவர் தென் கொரியாவின் ஹோட்டல் ஒன்றில் கொரிய ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் காத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், அங்கு வந்த ஒருவர் கையில் வைத்திருந்த பிலேடைக் கொண்டு அவரது முகம் மற்றும் கைகளில் பலமாகத் தாக்கியுள்ளார். உடனே அங்கு சுற்றி இருந்த பாதுகாப்புப் படையினர் அவரைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதே நேரம், இரத்தம் சொட்ட சொட்ட சியோலின் யோன்செய் பல்கலைக்கழக(Yonsei University’s Severance Hospital) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் லிப்பெர்ட்.
மருத்துவர்கள், லிப்பெர்டின் வலது பக்க முகத்தில் 4 இன்ச் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சுமார் 80 தையல்கள் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும், அவரது வலது கையிலும், பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றாலும், நரம்புகளில் வெட்டு பட்டுள்ளதால் அவர் மீண்டும் கையை அசைப்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தாக்கிய கொரிய நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பெயர் கிம்-கி-ஜாங் என்பதும், அமெரிக்க-கொரிய இராணுவத்தின் கூட்டுப் பயிற்சியை எதிர்த்தே அவர் இவ்வாறு செய்ததும் தெரிய வந்தது.
தென் கொரியா மற்றும் வட கொரியா இரண்டும் ஒன்றாக வேண்டும் என்று கோருபவர்களில் ஒருவர் தான் கிம்-கி-ஜாங் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் முட்டிக் கொண்டு இருந்ததால், இந்நிகழ்வுக்கும் வட கொரியாவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை சென்று கொண்டுள்ளதாம். அதே சமயம், இந்த சம்பவத்திற்கு வட கொரியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment