ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ஒரு பெண்ணை அடித்து உதைத்து தீயிட்டு கொழுத்தியுள்ளது ஒரு கும்பல்.
ஆப்கானிஸ்தனின் காபூல் பகுதியில் வசிக்கும் பார்குந்தா என்ற பெண் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் அந்த பெண்ணை வீதியில் வைத்து கற்கள் மற்றும் கம்பு போன்றவற்றால் தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரை இழுத்து சென்று அங்கிருந்த குளக்கரை அருகில் வைத்து எரித்து கொன்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
27 வயதான பார்குந்தா சுமார் 16 வருடங்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். ஆனால் அந்த கும்பல் அதனை ஏற்காமல் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளது.
வீடியோ கீழே...

No comments:
Post a Comment