Friday, 20 March 2015

அந்த ஹீரோயினை போடு.. இல்ல அப்படியே ஓடு.. மிரள வைக்கும் வெற்றி நடிகர்..!


வெற்றியை தனது பெயரில் கொண்டிருக்கும் இரண்டெழுத்து நடிகரை பார்த்தாலே தெறித்து ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
காரணம் தற்போது வலிமையான படம் ஒன்றில் முத்த நடிகையுடன் நடித்து வரும் அவர் இனிமேல் இதுபேன்று இரண்டாம் தட்டு ஹீரோயின்களுடன் நடிக்க மாட்டேன் முதல் தட்டு நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறுகிறாம்.
அதுவும் குயூன் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நம்பர் நடிகையை போன்று பிரபல நடிகைகள் தான் தன்னுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
அதனால் தற்போது இரண்டு டைரக்டர்களிடம் கதை கேட்டிருக்கும் வெற்றி நடிகர், இந்த படங்களுக்கு நான் கால்சீட் தர வேண்டும் என்றால் நான் சொல்லும் ஹீரோயினை புக் பண்ணுங்கள். அதன்பிறகுதான் நான் கால்சீட் தருவது பற்றி முடிவெடுப்பேன் என்று கண்டிசனாக சொல்லியிருக்கிறாராம்.
இதுவரை கதையை மட்டுமே கேட்டு படங்களை ஓகே செய்து வந்த வெற்றி நடிகர், இப்போது கதாநாயகி விவகாரத்தில் மூக்கை நுழைப்பது இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

No comments:

Post a Comment