Friday, 20 March 2015

மகளுக்காக ஆணாக மாறிய தாய்!!?


எகிப்தை சேர்ந்த சிசா அபு தாவோக் என்ற பெண்மணி தனது மகளுக்காக 43 ஆண்டுகளாக ஆண் வேடத்தில் வாழ்ந்துள்ளார்.
சிசா கர்ப்பமாக இருக்கும் போதே அவரது கணவர் இறந்து விட்டார். இவர்களின் குடும்ப வழக்கப்படி பெண்கள் வேலை செய்யக் கூடாதாம். கணவரை இழந்து கை குழந்தையுடன் கஷ்டப்பட்ட சிசா தனது மகளுடன் கௌரவமாக வாழ ஒரு முடிவு எடுத்தார்.
அதாவது, அவரைப் பற்றி தெரியாத ஒரு கிராமத்துக்குச் சென்ற சிசா, அங்கு ஆண் வேடம் இட்டு, ஆண்களுக்கான ஆடையை மிகவும் தொலதொலவென்று தைத்து அணிந்து கொண்டு கட்டடப் பணிகளுக்குச் சென்றார். சாலையோரம் செருப்புக்கு பாலீஷ் போட்டு தற்போது தனது பெண்ணை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
தற்போது 63 வயதாகும் சிசாவுக்கு  ‘லட்சியத் தாய்’ என்று விருது வழங்கி அந்நாட்டு சமூக சேவை நிறுவனம் ஒன்று பாராட்டியுள்ளது.

No comments:

Post a Comment