இது எப்படி நடந்தது.. எப்படி இது சாத்தியமாகும்.. அப்படி இப்படினு ஒரே யோசனையில் மூழ்கி கிடக்கிறதாம் கோடம்பாக்கம். காரணம் கிளாசிக் படங்களை இயக்குவதில் வல்லவரான கெளதம் மேனன், ஆக்ஷன் குதிரையான விஷாலை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம்.
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திற்காக ஏற்கெனவே பாதியில் விட்ட சிம்பு படத்தை ‘அச்சம் என்பது மடமையடா’ என பெயரிட்டு படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார் கௌதம்மேனன்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு படங்களையும் அவர் உறுதி செய்து விட்டார். அதில் ஒன்று விக்ரம், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம். இப்படம் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.
இன்னொரு படம் தான் ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் சர்ப்ரைஸ். சுமோக்கள் பறக்க, பனை மரங்கள் சாய, நானும் மதுரைக்காரன்தாண்டா என மரண மாஸ் ஆக்ரோஷம் காட்டும் விஷாலும்... ரொமான்ஸ் ஸ்பெஷல் கௌதம்மேனனும் இணைவது தான்.
இவர்கள் இணைவது ஒரு பக்கம் ஆச்சரியம் மூட்டினாலும், படத்தில் அப்படி என்ன தான் ஸ்பெஷல் இருக்கிறது என்ற எதிர்பாப்பு இப்போதே எகிறி அடிக்கிறது. ஒருவேளை விஷால் இதில், ‘நானும் மெட்ராஸ்காரன்தாண்டா’ என வசனம் பேசுவாரோ..? இல்லை ஆக்ஷன் கிங் விஷாலை ரொமாண்டிக் கிங் விஷாலாக கெளதம் மேனன் மாற்றுவாரோ..? என்னவென்று தெரியவில்லை.

No comments:
Post a Comment