பாலிவுட்டின் வசூல் மன்னனாக வலம் வருப்பவர் அமீர்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த பிகே படம் உலகம் முழுவதும் வசூல் மழையை பொழிது சாதனை படைத்தது.
அதைத்தொடர்ந்து தற்போது ''டங்கல்'' படத்தில் நடித்து வரும் அமீர்கான் ஒரு நிமிட விளம்பரப் படத்தில் நடிக்க ரூ 1 கோடி சம்பளமாக வாங்கி வாயை பிளக்க வைத்திருக்கிறார்.
பொதுவாகவே பாலிவுட் நடிகர் நடிகைகள், சினிமாவில் நடிக்க வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பளத்தை விளம்பரங்கள் மூலம் பெறுகிறார்கள். அதுவும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். குறிப்பாக அழகு சாதன பொருட்கள், ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்தி நடிகர்களை போட்டி போட்டு ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கின்றன.
சல்மான்கான், அஜய் தேவ்கான், சயீப் அலிகான், ஜஸ்வர்யாராய், கரீனா கபூர், கத்ரினா கைப் உள்ளிட்ட பலரும் விளம்பர படங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள். இவர்கள் ஒரு விளம்பர படத்தில் நடிக்க அதிக பட்சம் ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்றனர். தற்போது இந்த சாதனையை அமீர்கான் முறியடித்துள்ளார்.
சமீபத்தில் ஆன் லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று அமீர்கானை விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த விளம்பர படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக ரூ.10 கோடியை அமீர்கானுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
பாலிவுட்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தமாகியுள்ள முதல் நடிகர் அமீர்கான்தானாம். இதற்கு முன் எந்த நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியதே இல்லையாம்.

No comments:
Post a Comment