Tuesday, 3 March 2015

இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!?


நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நம் கடமையாகும். நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுப்பதற்கு நாம் தனியாக ஏதும் செய்யத் தேவையில்லை. நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கங்களே போதும் நமது உடலை கெடுப்பதற்கு.
முறையற்ற உணவுப் பழக்கம் நமது உடல் நலத்தினை கெடுத்துவிடும் என்பது நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. அதிலும் இரவில் நாம் சில உணவுகளை சாப்பிடவே கூடாது.
இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் இரவில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று காணலாம்.
பாஸ்தா போன்ற உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இவற்றில் இருக்கும் அதிகபடியான கார்போஹைட்ரேட் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
பீட்ஸா, இதில் அதிகளவு கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம் இருப்பதால், உடல் பருமனாகும் அபாயம் அதிகம்.
இறைச்சி, இறைச்சியில் அதிகமான புரோட்டீன் இருப்பதால் செரிமானமாவதற்கு அதிகளவு ஆற்றல் தேவை. இரவு நேரத்தில் இத்தகைய ஆற்றல் கிடைப்பது கடினம். எனவே செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு தூக்கமின்மை ஏற்படும்.
சாக்லேட், இதில் இருக்கும் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு தூக்கத்தை கெடுக்கும். சரியான தூக்கமின்மை மிகவும் ஆபத்தான ஒன்று.
இரவில் சாதம் சாப்பிடுவதும் தூக்கத்தை பாதிக்கும். எனவே இரவில் இட்லி, போன்ற எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment