Tuesday, 3 March 2015

காக்கி சட்டை படத்தின் முதல் வார வசூல் எவ்வளவு..?


சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு நடிப்பில் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ’காக்கி சட்டை’.
தமிழகத்தில் மட்டும் 372 தியேட்டர்களிலும் உலகம் முழுவதும் 800 தியேட்டர்களிலும் வெளியான் இப்படத்தை தனுஷ் தயாரிக்க எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கி வெளியிட்டுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்தக் கூட்டணியில் வெளிவந்த எதிர் நீச்சல் படம் மாபெரும் வெற்றியை பெற்றதால் காக்கி சட்டை படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. இதனால் முதல் நாளன்று படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
முதல் நாளில் மட்டும் இப்படம் சுமார் 4.62 கோடியை வசூலித்ததாம். 2-வது நாளில் சுமார் 3.95 கோடியும் , மூன்றாவது நாளில் சுமார் 4.77 கோடியும் முதல் வார முடிவில் மொத்தம் ரூ.13.34 கோடி வசூல் செய்ததாகவும் முன்னணி சினிமா விமர்சகர் ஒருவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படம் முதல் வாரத்தில் ரூ.10 கோடி வசூல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment