Tuesday, 3 March 2015

உ.கோ.,யில் தென்னாப்ரிக்கா உருவாக்கிய புது உலக சாதனை!!


உலகக் கோப்பை போட்டியில் புதிய உலக சாதனையை தென் ஆப்ரிக்க அணி படைத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியின் 24வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் விளையாடி வரும் தென் ஆப்ரிக்க அணி 50 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பில் 411 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது முறையாக இந்த தொடரில் 400க்கும் அதிகமான ரன்னை எடுக்கின்றது. கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்தது. இதனால் தொடர்ச்சியாக இரண்டு முறை 400க்கும் அதிகமான ரன்களை எடுத்த அணி என்ற பெருமையை அடைந்துள்ளது.
மேலும் இன்று 411 ரன்கள் எடுத்ததன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த அணி பட்டியலில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. 415 ரன்கள் எடுத்து இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இது மட்டுமின்றி ஒரு நாள் போட்டிகளில் 5 முறை 400 ரன்கள் எடுத்த அணி என்ற இந்தியாவின் சாதனையையும் சமன் செய்துள்ளது தென் ஆப்ரிக்கா.

No comments:

Post a Comment