தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ஆடுகளம் படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் கிஷோர். இது மட்டுமில்லாமல் ஈரம், பரதேசி, மாப்பிள்ளை, உதயம் என்எச் 4, எங்கேயும் எப்போதும், காஞ்சனா, எதிர்நீச்சல் போன்ற பல வெற்றிப்படங்களிலும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார்.
36 வயது இளைஞரான இவர் இன்று மரணத்தின் விளிம்பில் இருக்கிறாராம். இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போதே திடிரென்று மயக்க நிலைக்கு சென்றுள்ளார். பின் அருகில் இருந்த விஜயா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இவரின் மூளையில் ரத்தம் கசிந்து, இப்போது பெருமளவு பரவி, அவர் நினைவைப் பறித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்றுவிட்டாராம்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இந்த மிகச் சிறந்த திறமையாளரை நேற்று நள்ளிரவு வரை யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. மருத்துவமனை நிர்வாகமோ, 'இவர் கிட்டத்தட்ட இறந்துவிட்ட நிலைதான். இனி சிகிச்சையளிப்பதில் பலனில்லை' என்றே கூறிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த வேதனையில் கிஷோரின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட, அதே மருத்துவமனையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் பிழைப்பார்... தயவு செய்து முயற்சி செய்யுங்கள் என்று மருத்துவர்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் கிஷோரின் பெற்றோரும், நண்பர்களும். இதை அறிந்த திரைப்பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:
Post a Comment