அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வசித்து வரும், சீக்கிய சிறுவன் ஹர்சுக் சிங். இவர் அங்குள்ள சாட்டஹூச்சி துவக்கப் பள்ளியில் பயின்று வருகிறார்.
இவருடன் பள்ளியில் பயிலும் அமெரிக்க மாணவர்கள் தீவிரவாதி என்று கேலி செய்து வருகின்றனராம். இதைத் தடுக்க ஹர்சுக் ஒரு நூதன நவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்.
அதாவது, அவர் பள்ளி செல்லும் பஸ்ஸில் அவரது சக மாணவர்கள் அவ்வாறு சொல்லும் போது அதை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவின் போது, இவருக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் மாணவிகள் இவரை தீவிரவாதி என்று சொல்வதும், தான் ஒரு ஆப்கானிஸ்தான் தீவிரவாதி அல்ல ஒரு சீக்கியர் என்றும் கூறிவிட்டு, அவர்கள் சொல்லுவதை பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்லுவதும் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த வீடியோவை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். சீக்கியர்களை அமெரிக்கர்கள் முஸ்லீம் தீவிரவாதிகளாக அடையாளம் காண்பது இது முதல் முறை அல்ல.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் லாங் ஐலேண்ட் பகுதியில், சந்தீப் சிங் என்ற 29 வயது சீக்கியரை, ஒசாமா பின்லேடன் என்று அமெரிக்கர்கள் சிலர் அழைத்துக் கேலிச் செய்தது பெரும் நினைவிருக்கலாம்.
இதை அடுத்து மீண்டும் அதே போலான ஒரு சம்பவம் சிறுவர்களிடையே நடந்திருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ கீழே...
வீடியோ கீழே...

No comments:
Post a Comment