கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் என்னை அறிந்தால். ஏ.எம் ரதனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துக்கு இணையாக நடித்திருந்தார் அருண் விஜய்.
இப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகினரிடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றார் அருண் விஜய். நீண்ட வருடமாக ஒரு வெற்றி படமாவது கொடுக்க மாட்டோமா என்று ஏங்கியவருக்கு இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
இந்நிலையில் அருண் விஜய்க்கு அஜித்தின் ஏழு வயது மகளான அனோஷ்கா ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். என்னை அறிந்தால்' படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து முடித்தவுடன் அருண்விஜய்யை சந்தித்த அனோஷ்கா, ஒரு கடிதத்தை கொடுத்ததாகவும், அந்த கடிதத்தில் 'முதல்முறையாக வில்லன் வேடத்தில் நடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.
இந்த படத்தில் நீங்கள் நடித்த காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு அற்புதம். என் தந்தையுடன் நடித்ததற்கு நன்றி' என்று எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் இப்போது தான் வெளியே கசிந்திருக்கிறது.

No comments:
Post a Comment