கம்பீரம், முத்திரை போன்ற படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆடிய ராக்கி சவந்த் ‘ஐ லவ் யூ கோலி’என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த அழகு சாதன நிலையத் திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார் ராக்கி சவந்த். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் ‘‘இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த ஒரு அற்புத நட்சத்திரம் கோலி. ஆரம்பத்தில் அவர் ரசிகராக இருந்தேன். பின்னர் என்னை அறியாமல் என் மனதை அவரிடம் பறிகொடுத்து விட்டேன். ’ஐ லவ் யூ கோலி’ என்று காதலில் பொங்கிவிட்டார்.
ஏற்கெனவே அனுஷ்கா ஷர்மாவும் கோலியும் காதலிக்கிறார்களே? நீங்கள் இப்படிச் சொல்வது தப்பில்லையா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவர், கோலி, அனுஷ்காவைக் காதலிக்கிறார் என்பது உலகத்துக்கே தெரியும். ஆனால், இன்னும் அனுஷ்கா தன் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லையே.
ஆனால், நான் என் மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய ஆள். நான் என் காதலை உலகறிய ஒப்புக்கொள்கிறேன். அதனால், நான் கோலியைக் காதலிப்பதில் தவறில்லை. என்று பகீரங்கமாக பேட்டியளித்திருக்கிறார் ராக்கி சவந்த். இந்த பேட்டியை பார்த்த அனுஷ்கா ஷர்மாவிற்கு வயிறு எரிந்ததுடன் அந்த நடிகை மீது செம்ம கோபத்தில் இருக்கிறாராம்.

No comments:
Post a Comment