‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சார்மி.
அதன் பிறகு ‘ஆஹா எத்தனை அழகு’, லாடம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும் எந்தப்படமும் அவருக்கு வெற்றிபடமாக அமையவில்லை. ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். தற்போது அங்கேயும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை என்பதால் கடைத்திறப்பு விழாக்களில் கலந்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் வாய்ப்புக்காக காத்திருந்த சார்மிக்கு அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநருமான புரி ஜெகநாத் கைகொடுத்திருக்கிறார். அடுத்து அவர் இயக்கும் ‘ஜோதிலட்சுமி‘ படத்தில் அவரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பும் தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் நீச்சல் உடையுடன் கிளாஸ் ஒன்றுக்கு முத்தமிட்டப்படி போஸ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் சார்மி. தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினத்தன்று தனது இணையதள பக்கத்தில் நீச்சல் உடையுடன் ஜூஸ் கிளாஸ் ஒன்றுக்கு முத்தமிட்டபடி தோன்றும் ஸ்டில் வெளியிட்டு யுகாதி வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார் சார்மி.
யுகாதி என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடும் விழா அதற்கு கொஞ்சமும் பொருந்தாத வகையில் ஜூஸ் கிளாஸுக்கு முத்தம் கொடுப்பதுபோல் அதுவும் நீச்சல்உடையில் நின்றபடி வாழ்த்து கூறுவதா என்று பலர் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளனர். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் சார்மி.

No comments:
Post a Comment