Tuesday, 3 March 2015

பிரிட்டன் செல்பவர்களுக்கு விசா வாங்குவதில் புதிய கெடுபிடி…!!


இங்கிலாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதில், புதிய கெடுபிடிகளை புகுத்தியுள்ளது பிரித்தானிய அரசு.
பிரித்தானியாவின் குடியேற்ற சட்டங்கள் தற்போது, இறுக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் மற்றும் ஜிஹாதிகளை ஒடுக்கும் விதமாக பிரிட்டன் எல்லை பாதுகாப்பு விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்தை தவிற, வேறு நாடுகளில் இருந்து பிரிட்டன் விசா கோரும் அனைத்து வெளிநாட்டவரும், அவர்களது சொந்த நாட்டில் 10 ஆண்டுகளுக்கு குற்றங்களில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.
18 வயதுக்கு கீழானவர்கள் மற்றும் அகதிகளுக்கு மட்டும் இந்த புதிய சட்டத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாம். இதன் படி பிரிட்டனில் சென்று செட்டில் ஆக நினைக்கும் அல்லது வேலை செய்ய விரும்பும் அனைவரும், இனி 10 வருடங்களுக்கு குற்றம் ஏதும் இல்லை என்ற போலீஸ் வெரிஃபிகேஷன் சான்றிதழுடன் தான் செல்ல வேண்டுமாம்.

No comments:

Post a Comment