Tuesday, 3 March 2015

மக்களிடம் கவர்ச்சியாக பேசி 46 கோடி சுருட்டிய பெண், ஜோடி No. 1 வின்னர் கைது!!


மக்களை ஏமாற்றி 46 கோடு ரூபாய் சுருட்டிய பென் தொழிலதிபரும் அவரது உதவியாளராகப் பணி புரிந்து வந்த ஜோடி நம்பர் ஒன் வின்னர், தொலைகாட்சிப் பிரபலமும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், முக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நர்மதா. இவரது தந்தை ஓய்வு பெற்ற அறநிலையத் துறை அதிகாரி. 34 வயதான நர்மதா தனது தொழிலதிபர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
கோயம்பேடு பிருந்தாவன் நகர், முல்லைத் தெருவில் வசித்து வரும் இவருக்கு மகளும், மகனும் என 2 பிள்ளைகள் உள்ளனர். வாடைக்கு கார்களை விடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரிடம், ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் முதல் பரிசு வெற்றி பெற்ற பரத் என்பவர் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நர்மதாவும், தொலைகாட்சிப் பிரபலம் பரத்தும், கார் ரெண்டல் நிறுவனம் மூலம் முதலீட்டுத் திட்டங்களை அறிவித்து மக்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டு தற்போது ஏமாற்றிவிட்டதாக இவரிடம் கார் டீலிங்க் வைத்துக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் அவர் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தொழில் அதிபர் நர்மதா கடந்த 2010-ம் ஆண்டு முதல், குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம். எங்களுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நர்மதா ஒரு தகவலை அனுப்பினார்.
வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று நர்மதா அறிவிப்பு வெளியிட்டார். வாடிக்கையாளர் முதலீடு திட்டம் என்று அந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித் தரப்படும் என்றும், அத்துடன் தங்க காசு பரிசாக கிடைக்கும் என்றும், ஒரு ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் நர்மதா கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
செல்போன் எஸ்.எம்.எஸ். அறிவிப்புகளை தொடர்ந்து நாங்கள் நர்மதாவை நேரில் சென்று பார்த்து பேசினோம். அவரது அறிவிப்பு மட்டும் கவர்ச்சியாக இல்லை. அவரது கவர்ச்சியான பேச்சும் எங்களை அவரது மோசடி வலையில் சிக்க வைத்து விட்டது. லட்சம், லட்சமாக அவரிடம் பணத்தைக் கொண்டு கொட்டினோம்.
நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி சிலருக்கு தங்க காசு பரிசாக கொடுத்தார். இதனால் மேலும் நூற்றுக்கணக்கான பேர், நர்மதாவிடம் முதலீடு பணத்தை கோடி, கோடியாக கொட்டினார்கள். ஒரு சிலருக்கு முதலீட்டு பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுத்தார்.
பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார். பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். வங்கி காசோலை பெற்றவர்களுக்கு நெற்றியில் பட்டை நாமம் போட்டது தான் மிச்சம். காசோலைகளுக்கு நர்மதாவின் வங்கி கணக்கில் பணம் இல்லை. போலி காசோலைகளாக திரும்பி வந்தன. எங்களது வயிற்றில் அடித்து கொள்ளை அடித்த முதலீட்டு பணத்தில், நர்மதா சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.
அவரது மோசடி லீலைகளில் சிக்கி வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ.46 கோடி வரை இருக்கும். நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை பார்க்கும் பரத்குமார் (24) மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது மோசடி லீலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்த புகாரின் அடிப்படையில், பெண் தொழிலதிபர் நர்மதாவையும், தொலைகாட்சிப் பிரபலம் பரத்தையும் போலீசார், நேற்றைய முந்தினம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment