முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு மொடி வாழ்த்து தெரிவித்தார். இதை அடுத்து அண்மையில் நடந்த பட்ஜெட் தாக்கலின் போது, பா.ஜ.க., திட்டங்களுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
இவை இரண்டுமே மறைமுகமாக எதையோ குறிப்பிடுவது போல அமைவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவிப்பதும், மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் அ.தி.மு.க. தெரிவிக்காமல் இருப்பதும்
ஏன், ஜெயலலிதாவின் வீட்டிற்கே வந்து மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்த்துப் பேசுவதும், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போல எதையோ "சூசகமாக" தெரிவிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக கேள்வி பதில் வாக்கில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
கேள்வி: சுரேஷ் பிரபுவின் மத்திய ரயில்வே பட்ஜெட்டையும், அருண் ஜெட்லியின் பொது பட்ஜெட்டையும் எல்லோரையும் முந்திக் கொண்டு ஜெயலலிதா வரவேற்று அறிக்கை கொடுத்தது எதைக் காட்டுகிறது?
கருணாநிதி: தமிழக அரசின் சார்பில் முதல்வராகவும், நிதியமைச்சராகவும் இருக்கும் பன்னீர்செல்வம் மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் பற்றியோ, பொது பட்ஜெட் பற்றியோ கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், வீட்டிலிருந்து வெளியேயே வராத, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா எல்லோரையும் முந்திக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகளை வரவேற்று அறிக்கை கொடுத்திருப்பதும் -
ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு எல்லோரையும் முந்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்திருப்பதும் - மத்திய அரசின் மதவாத ஆதரவு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத மயமாக்கல் போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் அ.தி.மு.க. தெரிவிக்காமல் இருப்பதும்
- ஏன், ஜெயலலிதாவின் வீட்டிற்கே வந்து மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பார்த்துப் பேசுவதும், "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போல எதையோ "சூசகமாக" தெரிவிக்கின்றது! இதற்கிடையே நாளேடு ஒன்று 1-3-2015 அன்று "பா.ஜ.க.வுடன் நெருங்கும் அ.தி.மு.க." என்ற தலைப்பில் இது பற்றி ஒரு செய்தியே வெளியிட்டுள்ளது.
கேள்வி: மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டண உயர்வு செய்திருப்பதால் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் நஷ்டம் ஏற்படும் என்று செய்தி வந்திருக்கிறதே?
கருணாநிதி: இந்த ஆண்டு 26ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணத்தை 0.9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள். இதில் சிமெண்டுக்கு 2.3 சதவிகிதம், நிலக்கரிக்கு 6.3 சதவிகிதம், மண்ணெண்ணெய், எல்.பி.ஜி., மற்றும் இரும்பு உருக்கு ஆகியவற்றுக்கு 0.9 சதவிகிதம், உரம், பருப்பு மற்றும் தானிய வகைகளுக்கு 10 சதவிகிதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியை ரயிலில் கொண்டு வருவதற்காக தமிழக மின் வாரியம் ஆண்டுதோறும், மத்திய ரயில்வே துறைக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் செலுத்துகிறது. தற்போது நிலக்கரியை சரக்கு ரயிலில் கொண்டு வருவதற்கான கட்டணம் 6.3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பொது பட்ஜெட்டில் சேவை வரி, 12 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு நடப்பாண்டில், சரக்கு ரயில் கட்டணத்தில் 125 கோடி ரூபாயும், "கிளீன் எனர்ஜி" வரி 275 கோடி ரூபாயும் என கூடுதலாக 400 கோடி ரூபாடீநு செலவு ஏற்படும். "கழுத்துக்கு மேல் போய்விட்டது, சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன" என்று தான் நமது ஆட்சியினர் நினைப்பார்கள்!

No comments:
Post a Comment