ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். ஒலிம்பிக்கிற்கு இணையாகக் கருதப்படும் இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன.
சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. நான்கு அண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டி, 1951ம் ஆண்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் துவங்கப்பட்ட தினம் இன்று.
இந்த முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 11 நாடுகளைச் சேர்ந்த 489 வீரர், வீராங்னைகள் பங்கேற்றனர். அண்மையில், கடந்த அக்டோபர் 2014ல் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடந்த இதில், இந்தியா 11 தங்கப்பதக்கங்களுடன் 8வது இடத்தை பிடித்தது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
செயிண்ட் காசிமிர் தினம் (போலந்து மற்றும் லித்துவேனியா)

No comments:
Post a Comment